Saturday, December 4, 2010

பஞ்ச சயன ரங்கம் - பகுதி-06 // 04.12.2010

05. திருப்பேர்நகர் என்னும் கோவிலடி


கோபுரப்பட்டி அருகிலுள்ள அழகிய மணவாளம், திருவெள்ளரை மற்றும் திரு அன்பில் ஆகிய க்ஷேத்திரங்களைத் தரிசித்து விட்டீர்களா? வாருங்கள் நாம் பஞ்ச சயன ரங்கத்தின் முற்றுப்புள்ளியான ஸ்ரீஅப்பாலரங்கன் உறையும் கோவிலடிக்கு பயணிப்போம்.



திரு அன்பிலிலிருந்து ஒரு புதியபாலம் ஒன்று காவிரியின் குறுக்கே சமீபத்தில்

கட்டப்பட்டுள்ளது. அன்பில் பெருமாளின் அரவணைப்பைப் பெற்றபின் இந்த பாலம் வழியே சீக்கரமாகவே இந்த சன்னிதியினை அடையலாம்.



'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே!'

- நம்மாழ்வார் திருவாய்மொழி



திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
"இருப்பேன்" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!"




- நம்மாழ்வார் திருவாய்மொழி



பெருமாள், “இந்த இடத்தை விட்டு பெயரேன்“ எனவருளியதால், 'திருப்பேர்நகர்' என்று பெயர்க்காரணம் . நம்மாழ்வார் இந்த பெருமாளை தரிசித்தபின் “...அமுதுண்டு களித்தேனே...“ என்கின்றார். ஆம் இந்த அமுதம் நம் பிணி போக்கும் அமுதம்.

நம் பசி, நம்மை சுற்றியுள்ளோரின் பசியாற்றும் அமுதம். நம் பாபம் போக்கும் அமுதம். நமக்கு அழிவில்லா மொக்ஷானந்ததை காட்டிக்கொடுக்கும் அமுதம்!




சோழ தேசத்தின் வழியாக கோயில் என்னும் திருவரங்கத்திற்குள் பக்தர்கள் எடுத்துவைக்கும் முதல் அடியில் இருப்பதால் இந்த திவ்யதேசம் கோயிலடி என்று பெயர்பெற்றது!




நம் மன இருளின் நடுவே ஜீவாத்மாவிற்கு சுஷும்னா நாடியை காட்டிக்கொடுக்கும் பேரொளியாய்!, பேறேன்! என்று உள்ளத்தினுள் இருக்கும் அந்தர்யாமியாக, நம் நெஞ்சுக்குள் நிறைபவரே இந்த திருபேர்நகர் எம்பெருமான்!. நாம் ஸ்ரீவைகுண்டம் புகுவதற்கு ஆணிவேராய் உதவும் பெருமாள் இவர்!




எப்படி ஜீவாத்மா ஸ்ரீவைகுண்டம் அடைவதற்கு முதலடியாய் அந்தர்யாமி துனைபுரிகிராரோ! அப்படியே நாம் பூலோக வைகுண்டமான திருவரங்கம் புக துனைபுரிகிறார் இந்த பெருமாள்!



இந்த பெருமாள், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார்ஈ திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (33 பாசுரங்கள) ஆகியோரால் கொண்டாடப்பட்டவர்.



மேற்கு நோக்கி சயனம். தாயார் கமலவல்லித் தாயார். விமானம் - இந்திரவிமானம்.

தீர்த்தம் காவிரி.



இங்கு இத்தலத்துப் பெருமாள் காவிரியின் கரையில், ஒரு கையினை அப்பக்குடத்தின் மேல் வைத்தப்படி, காவிரியன்னையின் தாலாட்டு அரவணைப்பில் குளர்ச்சியாய் பள்ளி கொண்டருளுகின்றார்.



எப்போதும் நதிதீரத்தில் குளிர பள்ளி கொள்ளும் இப்பெருமாளை வணங்குவோர் வாழ்வுதனையும் இத்தலத்து பெருமாள் குளிரக் கடாக்ஷிக்கின்றார். காவிரி கரையின் ஓரமாக ஒரு முறை பயணித்து இந்த பெருமாளையும் தரிசியுங்கள.



வாழ்வில் உய்வு பெறுதல் திண்ணம்..!







- தொடரும்...





Dear Swami,
Adiyen Ramanuja Dasan,
This is the place Where Nammalwar did the last Saranagathi in Thiruvaimozhi.
With 2nd and 3rd verse, he proclaims that he surrendered unto ThiruperNagar emperuman and in the 10th verse,he proclaims that he got the upeyam, that is thirupernagar emperuman's thiruvadi and also tells us there will be no problems any more if you surrender unto the devotee of thirupernagar emperuman.

-rajagopal.kannan@gmail.com








- தொடரும்...